ஆப்நகரம்

அண்ணாசாலை குண்டு வீச்சு: வான்டடாக வந்து சரணடையும் வாலிபர்கள்..!

சென்னை அண்ணாசாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முதல்முறை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Mar 2020, 7:53 pm
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 3ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள், நாட்டு வெடிகுண்டு வீசினர். இது தொடர்பாக, சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்ட கமருதீன், ராஜசேகர், பிரசாந்த், ஜான்சன் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் ஏற்கெனவே நேற்று மாலை சரணடைந்தனர்.
Samayam Tamil அண்ணாசாலை குண்டு வீச்சு வான்டடாக வந்து சரணடையும் வாலிபர்கள்


அதனை தொடர்ந்து இன்று தென்காசி குற்றவியல் நடுவர் மன்றத்தில், சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த சதீஷ் (27), புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரீஷ் (20), தண்டையார் பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற செல்வா (25) ஆகிய 3 பேர் சரணடைந்தனர்.

இந்த 3 பேரையும் வருகிற 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நடுவர் பிரகதீஸ்வரன் உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் நாட்டு வெடுக்குண்டு வீச்சு தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முதல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை வெடிகுண்டு வீச்சு: 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

அந்த புகாரை வழக்கறிஞர் தங்கராஜ் என்பவர் அளித்துள்ளார். அதில், தனது கட்சிக்காரர்கள் மணிகண்டன் மற்றும் காக்காதோப்பு பாலாஜியை மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி