ஆப்நகரம்

பெண்ணை சிகரெட்டால் சுட்டு கூட்டு வன்கொடுமை..! மகன் கதறல், கணவன் வேடிக்கை...

கேரளாவில் ஐந்து வயது மகன் முன்பே பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Jun 2020, 5:47 pm
கேரள மாநிலத்தில் தற்போது அதிர்வலைகளை வீசியுள்ள கர்ப்பிணி யானையின் கொலை சம்பவம் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் இந்த சம்பவம் சில மனிதர்களின் மிருக குணத்தை காட்டியுள்ளது.
Samayam Tamil பெண்ணை சிகரெட்டால் சுட்டு கூட்டு வன்கொடுமை


திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வியாக்கிழமை அன்று இரவு நடுரோட்டில் நின்றுகொண்டு சாலையில் வந்த வானங்களில் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது அங்கு காரில் வந்தவர்கள் அந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளனர். மேலும், அந்த பெண் பலமாக தாக்கப்பட்ட நிலையில் இருந்ததால், காரில் இருந்தவர்கள் விசாரித்துள்ளனர்.

அப்போது அப்பெண் கூறியதாவது, தன்னையும் தனது 5 வயது மகனையும் என்னுடைய கணவர் திருவனந்தபுரம் கடற்கரைக்கு இன்று மாலை அழைத்து சென்றார். அங்கு இருந்த விடுதிக்கு சென்றபோது என்னுடைய கணவருக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் அங்கிருந்தனர்.

மது போதையில் இருந்த அவர்கள் என்னையும் மது குடிக்க வற்புறுத்தினார்கள். அதற்கு நான் மறுத்ததால் என்னை அடித்து தனி ரூமுக்கு தூக்கி சென்று கூட்டு வன்கொடுமை செய்துவிட்டனர். மேலும், சிகரெட் நெருப்பால் என்னை சுட்டு சித்ரவதை செய்தனர். அதனை கண்ட என் மகன் கதறி அழுதான்.

இரக்கமின்றி அவனையும் அடித்து கொடுமை செய்தனர். பின்னர், என் மகனை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் இங்கு வா என கூறி என்னை அனுப்பி விட்டனர் என அப்பெண் கதறியபடி கூறியுள்ளார். பெண்ணின் நிலையை கண்டு காரில் இருந்த குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் உடனே திருவனந்தபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவம் அறிந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை பெற்றுக்கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.

அங்கு பெண்ணை வன்கொடுமை செய்த பெண்ணின் கணவன் உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பெண்ணின் கணவருக்கும் அவர்களுடன் கூட்டணி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது 5 வயது மகன் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி