ஆப்நகரம்

ஆன்லைன் ரம்மியால் தமிழகம் இழந்த முதல் பெண்... அனாதையான குழந்தைகள்... சென்னை சோகம்

மணலி புதுநகரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

Samayam Tamil 6 Jun 2022, 6:18 pm
சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பாக்யராஜ். தனியார் நிறுவன ஊழியரான இவரின் மனைவி பவானி (29). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகும் நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். பவானி சென்னை கந்தன்சாவடியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், பவானி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil தற்கொலை செய்துகொண்ட பவானி
தற்கொலை செய்துகொண்ட பவானி


இது குறித்து தகவலறிந்த மணலி புதுநகர் போலீசார் உடல் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மணைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட போலீசார் விசாரணையில் மணலி புதுநகரில் இருந்து கந்தன்சவடிக்கு ரயிலில் செல்லும் போது எல்லாம், பவானி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததாகவும், பல இடங்களில் கடன் பெற்று ரம்மி விளையாடி வந்ததும் தெரியவந்துள்ளது. அக்கவுண்டில் இருந்த பணத்தை வைத்து விளையாடி வந்த பவானி அதில் நஷ்டம் ஏற்படவே வீட்டில் இருந்த 20 சவரன் நகைகளையும் விற்று ரம்மி விளையாடியுள்ளார். இது கணவனுக்கு தெரிந்த பின்னர் அவர் கண்டித்துள்ளார்.ஆனாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மியை தொடர்ந்து விளையாடி வந்தார்.

'ரொம்ப அடிமையாகிட்டேன்'... கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவி தற்கொலை...

மேலும், தனது சகோதரிகள் இருவரிடம் தலா ஒன்றரை லட்சம் என 3 லட்சம் கடன் பெற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் பிள்ளைகளுடன் பாக்யராஜ் இருந்தபோது குளித்துவிட்டு வருவதாக கூறி சென்ற பவானி நீண்ட நேரமாகியும் வரவில்லை... பின்னர்தான் அவர் தூக்கில் பிணமாக இருப்பது தெரிய வந்தது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்ட முதல் பெண் பவானி என்பதும் சோகமான உண்மை...

திருமணமாகி 6 வருடங்கள் ஆன நிலையில் தற்கொலை என்பதால் தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி