ஆப்நகரம்

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு 4 ஆண்டுகள் சிறை, சொத்துக்கள் அரசுடைமை - கோர்ட் அதிரடி

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக சேலம் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Mar 2021, 7:20 pm
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 8 நாட்களே உள்ளது. இந்நிலையில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil file pic


கடந்த 1991 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சின்ன சேலம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் அதிமுக வேட்பாளர் பரமசிவம். இவர் தனது பதவி காலத்தில் வருமானத்தை விட அதிக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் விழுப்புரம் கோர்ட்டுக்கு வந்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் வருமானத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்து மோசடி செய்திருப்பதை உருது செய்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

'சைஸ் என்னனு கேட்டாரு', காஞ்சனா பட திருநங்கையின் பாலியல் குற்றசாட்டு..!

மேலும், 1991 முதல் 95 வரை தனது பதவி காலத்தில் அவர் வாங்கியிருக்கும் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அபராத தொகையாக ரூ. 33 லட்சத்தையும் விதித்தது.

அடுத்த செய்தி