ஆப்நகரம்

சென்னை கோழிப்பண்ணை தீ விபத்து: 4 ஆயிரம் கோழிகள் உடல் கருகி உயிரிழப்பு..!

திருவள்ளூர் அருகே செயல்பட்டு வந்த கோழி பண்ணையில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு 4 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்துள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Oct 2020, 9:29 pm
சென்னை உட்பட புறநகர்களில் இன்று அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோடம்பாக்கம், வடபழனி புரசைவாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்பட்டன.
Samayam Tamil chicken farm accident


இதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் மெதூரை அடுத்த கல்மேடு என்ற கிராமத்தில் சுப்பிரமணி என்பவரது கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் 35 லட்சம் மதிப்பில் சுமார் 6 ஆயிரம் கோழி குஞ்சுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை பெய்த கனமழையால் கோழி குஞ்சுகளை வெதவெதப்பாக வைத்துக்கொள்ளும் சூடு கம்பியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் பண்ணையில் தீ மளமளவென பிடிக்கவே, பண்ணையில் இருந்த 4 ஆயிரம் குஞ்சுகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தன.

6 உயிர்களைக் கொன்ற வனவிலங்கு எது? அதிர்ச்சியில் மக்கள்!

தீ விபத்தை குறித்து உடனே தீ அணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவம் இடத்துக்கு வந்த வீரர்கள் தீயை அனைத்து எஞ்சிய 2 ஆயிரம் கோழி குஞ்சுகளை பாதுகாப்பாக மீட்டனர். இதனால் 20 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி