ஆப்நகரம்

பலாப்பழத்துக்கு நடுவே கஞ்சா: கடத்தல் கும்பல் கைது!!

திருப்பதி அருகே லாரியில் பலாப்பழங்களுக்கு இடையே ஒரு டன் கஞ்சா கடத்திய பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 19 Jun 2020, 12:26 am
திருப்பதி அருகே லாரியில் பலாப்பழங்களுக்கு இடையே ஒரு டன் கஞ்சா கடத்திய பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil ganja


ஒடிசா மாநிலத்தில் இருந்து பலாப்பழம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆந்திர மாநிலம் சித்தூரை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அந்த லாரியை சித்தூர் - திருப்பதி இடையே உள்ள பூத்தலப்பட்டு அருகே போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் பலாப்பழங்களுக்கு இடையே 64 பைகளில் வைத்து, ஒரு டன் எடையுடைய கஞ்சாவை கடத்தி செல்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக, லாரி டிரைவர் ஸ்ரீநிவாஸ் (45), வீரபாபு (35) கிளீனர் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ராணுவ அதிகாரியை போல் நடித்து இளைஞரிடம் கைவரிசை: வாட்ஸ் அப் ஆசாமியை தேடும் போலீஸ்!!

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கஞ்சா கடத்தலின் பின்னணியில் இருந்த வேம்பா ஸ்ரீதேவி (35), சேகர் (24), ராம்குமார் பானு (30), காசா ஹுஸ்பேன் (45), சேக் ஹூஸ்பேன் (27) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி