ஆப்நகரம்

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல், பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Samayam Tamil 27 Mar 2019, 6:25 pm
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல், பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Samayam Tamil coi


கோவை மாவட்டம் திப்பனூர் அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போக்சா சட்டதின்கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து தனி தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே குழந்தையின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது குற்றவாளிகளை வீடியோ கான்பரன்சிங் முறையில் காட்டுமாறு பெற்றோர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, விசாரணையில் உள்ள நபரை போலீசார் காண்பித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய எவிடன்ஸ் கதிர்; தமிழ்நாட்டின் நடைபெறுகிற பாலியல் விவகாரம் 65 சதவீதம் குழந்தைகள் மீது நடைபெறுகிறது. இந்த கொடூர சம்பவத்தில் இந்நேரம் தேசிய பெண்கள் ஆணையம் வந்து விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த சிறுமி தலித் என்பதால் உடனடி நடவடிக்கைகள் இல்லை.

மேற்கு மண்டலத்தை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மண்டலமாக அறிவிக்க வேண்டும். மேலும் இந்த விசாரணையை பெண் ஐபிஎஸ் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். இரண்டு பேர் கொண்ட மருத்துவக் குழு பிரேத பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கின் தீவிரம் இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில், கோவை மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் அரங்கேறி இருக்கும் இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

அடுத்த செய்தி