ஆப்நகரம்

வாட்ஸ் அப் குரூப்பில் பலான வீடியோ: ஆபாச சர்ச்சையில் சிக்கிய துணை முதல்வர்!

கோவா துணை முதல்வர் செல்போன் எண்ணில் இருந்து ஆபாச படம் ஒன்று வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் பகிரப்பட்டுள்ளதால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

Samayam Tamil 19 Oct 2020, 10:34 pm
கோவா பாஜக துணை முதல்வராக இருப்பவர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர் உள்பட பாஜகவில் 10 பேர் இணைந்து பாஜக ஆட்சியமைக்க வித்திட்டனர். அதற்கு வெகுமதியாக அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுத்து பாஜக அழகுபடுத்தியுள்ளது.
Samayam Tamil goa deputy cm files complaint over obscene clip sent to whatsapp group
வாட்ஸ் அப் குரூப்பில் பலான வீடியோ: ஆபாச சர்ச்சையில் சிக்கிய துணை முதல்வர்!



நள்ளிரவில் சென்ற பலான வீடியோ

இந்த நிலையில், சந்த்ரகாந்த் காவ்லேக்கர் செல்போன் எண்ணில் இருந்து ஆபாச வீடியோ ஒன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ‘VILLAGES OF GOA’ என்ற வாட்ஸ் அப் குரூப்பிற்கு ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கோவா அரசியல் களத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வலுக்கும் எதிர்ப்பு

சந்த்ரகாந்த் காவ்லேக்கருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கோவா முன்னணி கட்சியின் மகளிர் பிரிவினர், இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், சந்த்ரகாந்த் காவ்லேக்கர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நான் தூங்கிட்டு இருந்தேன்

இந்த நிலையில், துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கரும் இது தொடர்பாக கோவா சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ஆபாச வீடியோ அனுப்பப்பட்ட விவகாரத்தின் பிண்ணனியில் ஹேக்கர்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோ பகிரப்பட்ட நேரத்தில் தன்னுடைய செல்போனை பயன்படுத்தவில்லை என்றும், அந்த நேரத்தில் தான் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலீசாருக்கு வேண்டுகோள்

ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் தானும் உறுப்பினராக உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி