ஆப்நகரம்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

31 லட்ச ரூபாய் மதிப்புள்ள 957 கிராம் தங்கத்தை வருமான வரித் துறையினர் திருச்சி விமான நிலையத்தில் கைப்பற்றினர். இளயாங்குடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, கடலூரைச் சேர்ந்த முகமது நியாஸ், புதுக்கோட்டையைச் சேர்ந்த சபூபர் அலி ஆகிய கடத்தல் செய்த நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

Samayam Tamil 1 May 2019, 4:53 pm
திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். திருச்சி வானூர்தி நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பதினொன்றாம் இடத்தில் உள்ளது.
Samayam Tamil air india_0


இங்கு முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ், ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற வானூர்தி நிறுவனங்கள் வானூர்தி சேவையை இயக்க தொடங்கின. பின் கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா போன்ற வானூர்தி நிறுவனங்கள், வானூர்தி சேவையை தொடங்கின. இதில் கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ் மற்றும் மிகின் லங்கா விமான நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்திக்கொண்டன.

31 லட்ச ரூபாய் மதிப்புள்ள 957 கிராம் தங்கத்தை வருமான வரித் துறையினர் திருச்சி விமான நிலையத்தில் கைப்பற்றினர்.
அடிக்கடி தங்கம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கடத்தப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இவ்வாறு கடத்தப்பட்ட தங்கங்கள் சிக்குகின்றன. ஏர் ஏசியா விமானத்தில் கோலாலம்பூரில் இருந்து வரும் பயணிகள்மீது போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மெலிண்டோ ஏர்லைன்ஸ் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு மத்தியில் கடத்தல்காரர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இளயாங்குடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, கடலூரைச் சேர்ந்த முகமது நியாஸ், புதுக்கோட்டையைச் சேர்ந்த சபூபர் அலி ஆகிய கடத்தல் செய்த நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

அடுத்த செய்தி