ஆப்நகரம்

45 நிமிடங்கள் உயிர் போராட்டம், விடைபெற்ற சாத்தான்குளம் சிறுமி..!

சாத்தான்குளத்தில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு சிறுமியின் உடலை நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Samayam Tamil 17 Jul 2020, 6:13 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வடலிவிலை வாய்க்கால் பாலம் அருகே கடந்த 15ம் தேதி 8 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
Samayam Tamil sathankulam girl murder


இதனைத் தொடர்ந்து அவரது தாயார் உச்சிமாகாளி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் தாய் உச்சிமாகாளிக்கு 3 சென்ட் இடம் வழங்க வேண்டும், அரசு ஒருகோடி ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நேற்றைய தினம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஊர் திரும்பினர்.


இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் உடன் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் சிறுமியின் தாயாருக்கு வாழ்நாள் முழுவதும் ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் சிறுமியின் தாயார் வசிக்க 3 சென்ட் நிலம் பசுமை வீடு ஆகியவை கட்டித் தரப்படும் எனவும் உறுதியளித்தார்.

'நான்தான் செய்தேன்' பெரியார் சிலை விவகாரத்தில் வாலிபர் சரண்..!

மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் சகோதரனான 10 வயது சிறுவனுக்கு தேவையான படிப்புச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தைதைத் தொடர்ந்து உடலை பெற்றுகொள்ள சிறுமியின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் முதல் தகவல் அறிக்கையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட நிதியாக சிறுமியின் தாயாரிடம் ரூபாய் 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் சிறுமியின் உடலை பெற்றுச் சென்றனர். ஆம்புலன்ஸ் மூலம் உடல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையிலிருந்து கல்விளை கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் உடல் கொண்டு செல்லப்பட்டது.

சிறுமியின் பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதான தடயங்கள் இல்லை என்றும், அவரை கழுத்து நெரித்து மயக்கமாகி பின்னர் டிரம்முக்குள் போட்டு மூடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி