ஆப்நகரம்

சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ஜுவெனில் மலைப்பாம்புகள், பல்லிகள்.. அதிர்ச்சி வீடியோ...!

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை மலைப்பாம்பு மற்றும் பல்லிகளைச் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 11 Oct 2019, 3:35 pm
சென்னை விமான நிலையம் இந்தியாவில் இருக்கக் கூடிய அதிக போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. இங்குத் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயண ரீதியாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் வெளி நாடுகளிலிருந்து அசையும் மற்றும் அசையாப் பொருட்களைக் கடத்தி வருபவர்களைக் கண்காணிக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
Samayam Tamil 3


என் மீது தவறு இல்லை.. ஜாமீன் கேட்கும் அதிமுக முன்னாள் கவுன்சிலர்..!

கடந்த வியாழக்கிழமை அன்று மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த இருவரிடம் இருந்த பைகளைச் சோதனையிட்டதில் அதற்குள் சாக்லேட், கிப்ட் பொருட்கள் ஆகியவை இருந்துள்ளது. தொடர்ந்து சோதனை செய்ததில், கயிற்றினால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்த சிறிய பைகளை வெளியே எடுத்தனர். அதில் ஜுவேனியா மலைப்பாம்புகள் இரண்டு இருந்துள்ளன. அதில் ஒன்று பச்சை நிறத்திலும் மற்றொன்று கருப்பு நிறத்திலும் இருந்தது.


இந்த மலைப்பாம்புகள் ஆஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்டதாகும். மேலும் பல வகைகளைச் சேர்ந்த 13 உடும்புகளும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த உடும்புகள் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவையாகும். விலங்குகளைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்கா மருத்துவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்; மூளையாக செயல்பட்ட முருகன் சரண்!

அங்குக் கடத்தி வரப்பட்ட பாம்புகள் மற்றும் உடும்புகளைச் சோதனை செய்த அவர்கள் விலங்குகள் நலமாக இருப்பதாகக் கூறினர். கடத்தல் காரர்களை விசாரணை செய்ததில் ஒருவர், முகமது பர்வாஸ் (36) ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் முகமது அக்பர் (28) சிவகங்கையைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. கோலாலம்பூரிலிருந்து வந்த இவர்கள் சென்னை வந்தடைந்த பிறகு கடத்திவரப்பட்ட விலங்குகளை யாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி