ஆப்நகரம்

500 கோடியை வளைத்த கல்கி சாமியார் ‘எஸ்கேப்’: திகைக்கும் அதிகாரிகள்!

கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் கல்கி சாமியார், அவரது மனைவி இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

Samayam Tamil 19 Oct 2019, 4:32 pm
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் 40 இடங்களில் 4 நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
Samayam Tamil Untitled collage (3)


சோதனையில் 500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதில் 44 கோடி ரூபாய் ரொக்கமும், 26 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 88 கிலோ தங்கமும் 5 கிலோ வைரமும் அடக்கம். மேலும் 18 கோடி ரூபாய் மதிப்புடைய அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2014 -15ஆம் ஆண்டுகளில் கணக்கில் வராத 409 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நீளும் கல்கி சாமியாரின் சாம்ராஜ்ஜியம்!

இந்த 40 இடங்களிலும் கல்கி சாமியார், அவரது மனைவி இருவரையும் காணவில்லை. 3 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சித்தூர் ஆசிரமத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில்தான் அவர்கள் தங்குவதாக கூறப்பட்ட நிலையில் அங்கும் அவர்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளாக அவர்கள் ஆசிரமத்துக்கும் வருவதில்லை என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் பக்தர்களிடம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் தோன்றுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா, வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டார்களா என்று அதிகாரிகள் தேடிவருகின்றன. மேலும் சோதணையின் போது இருவரது பாஸ்போர்ட்டும் சிக்கவில்லை.

இந்த சோதனை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஆதிமூலம், “இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரமம் என்று நினைத்தோம். ஆனால் இங்கு கைப்பற்றப்படும் நகைகளும், பணமும், டாலர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆசிரம் அமைந்துள்ள பகுதி ஒரு மர்ம தேசம் போல் உள்ளது. ஏழை எளிய மக்களின் நிலங்களை அபகரித்து ஆசிரமம் கட்டியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்று கூறியுள்ளார்.

அடேயப்பா.. கல்கி சாமியார் பதுக்கிய 500 கோடி: எவ்வளவு ரொக்கம், நகை, டாலர்கள்!

ஆசிரமத்தை ஆரம்பித்து வளர்த்தது கல்கி சாமியார்தான் எனும்போது அவரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே இந்த முறைகேடுகள் குறித்து முழுவிவரமும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். தற்போது கல்கி சாமியார் மகன் கிருஷ்ணா, அவருடைய மனைவி ப்ரீத்தி, செயல் அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

அடுத்த செய்தி