ஆப்நகரம்

தமிழகம், ஆந்திராவில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது...!

ஆந்திரா: பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞரை ஆந்திரா போலீசார் கம்பம் பகுதியில் கைது செய்தனர்.

Samayam Tamil 15 May 2019, 1:31 pm
தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபரை விஷாகப்பட்டினம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Samayam Tamil பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட மோசடி பேர்வழி ஜவஹர் ஆந்திராவில் கைது
பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட மோசடி பேர்வழி ஜவஹர் ஆந்திராவில் கைது


ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் விசாகபப்ட்டினம் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜவஹர் என்ற வாலிபர் தன்னிடமிருந்து ரூ. 18 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

மேலும், திருமண ஆசைக்காட்டி ஜவஹர் தன்னை ஸ்ரீநகர் அழைத்துச் சென்று தனிமையில் இருந்ததாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் ஆந்திரா பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.

அப்போது ஜவஹர் தொடர்பாக பல்வேறு பின்னணி தகவல்கள் அவர்களுக்கு தெரியவந்தது. அதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். புகார் கூறப்பட்டுள்ள ஜவஹருக்கு ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு அவர் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

ஜவஹரை தொடர்பு கொண்டு விசாரித்த காவல்துறையிடம், தான் தொழில் நிம்மதமாக சிங்கப்பூரில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவருடைய செல்போன் டவர் சிக்னலை ஆய்வு செய்த காவலர்கள், ஜவஹர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பதுங்கியுள்ளதை கண்டுப்பிடித்தனர்.

உடனே அங்கு விரைந்த காவல்துறையினர், ஜவஹரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தென்னிந்தியா முழுக்க பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த பெண்ணை முதன்முதலாக இவர் திருமணம் செய்துள்ளார். அவர் கர்ப்பமடைந்த நிலையில் பெங்களூருக்கு அவசரமாக செல்வதாக கூறிவிட்டு அவரிடமிருந்து ரூ. 10 லட்சம் பெற்றுக்கொண்டு அங்கியிருந்து மாயமாகியுள்ளார்.

பிறகு பெங்களூரு, ஆந்திரா என பல்வேறு இடங்களை பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம் மற்றும் நகைகளை பறித்தவுடன் தப்பிச்சென்றுவிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

பெண்களை மட்டுமில்லாமல், இடத்திற்கு தகுந்தாற் போல தனது பெயர் மற்றும் அடையாளத்தை மாற்றிக்கொண்ட இவர், தன்னுடைய பெயரில் பல நிறுவனங்கள் இயங்குகின்றன என்று கூறி தொழில்முனைவோர், மாணவர்கள் பலரையும் ஏமாற்றி பண ஜவஹர் பறிப்பில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தற்போது விசாகப்பட்டினம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி பேர்வழி ஜவஹரால் வேறு யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர், வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளரா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி