ஆப்நகரம்

வரதட்சணை வழக்கில் லஞ்சம் வாங்கிய காஞ்சிபுரம் சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது!

வரதட்சணை வழக்கில் பரிந்துரை செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது.

Samayam Tamil 29 Nov 2021, 7:16 pm
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ண பிரசாத் மீது அவரது மனைவி அர்ச்சனா தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை என புகார் அளித்திருந்தார்.
Samayam Tamil Kanchipuram female social welfare officer


அந்த புகார் மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க மகளிர் காவல் நிலையம் காஞ்சிபுரம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு புகாரை அனுப்பி இருந்தது. அந்த புகாரை விசாரித்து கிருஷ்ண பிரசாத்துக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக தனது அறிக்கையை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க கிருஷ்ணா பிரசாத்திடம் சமூகநலத்துறை அலுவலகத்தில் தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்துவரும் பிரேமா என்பவர் கிருஷ்ணபிரசாத்திடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார்.

50 ஆயிரம் ரூபாயில் முதல் தவணையாக 25 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் கிருஷ்ண பிரசாத்திடம் இருந்து பிரேமா வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பைக்கையும் விற்று மது குடித்த கணவன்... கிணற்றில் குதித்து மனைவி,மகள் தற்கொலை..!

அதன்பிறகு சமூகநலத்துறை அலுவலகத்தில் மற்ற அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி