ஆப்நகரம்

திமுகவை சீண்டல்? கிஷோர் கே சாமி கைது: கருத்து சுதந்திரம் நசுக்கலா?

திமுக தலைவர்கள் பற்றி இணையத்தில் அவதூறு பரப்பியதாக அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி கைது

Samayam Tamil 14 Jun 2021, 2:06 pm
தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் , திமுக தலைவர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டதான புகாரில் அரசியல் விமர்சகரும், பாஜக ஆதரவாளருமான கிஷோர் கே சாமியை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், கிஷோர் கே சாமி மீது பெண் ஊடகவியலாளர்களை சமூக ஊடகங்களில் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


காஞ்சீபுரம் மாவட்ட திமுக ஐடி பிரிவின் ஒருங்கிணைப்பாளரின் புகாரின் அடிப்படையில் ஷங்கர் நகர் போலீசார் கிஷோர் கே சாமியை கைது செய்தனர். கடந்த ஜூன் 10 ம் தேதி கொடுக்கப்பட்ட புகாரில், ''முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அண்ணாதுரை ஆகியோரை பற்றி சமூக வலைத்தளத்தில் கிஷோர் கே சாமி அவதூறு பரப்பியதாக கூறப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரணை செய்த காஞ்சிபுரம் போலீசார் கே சுவாமியை கைது செய்துள்ளனர்.

கிஷோர் கே சாமி ஏற்கனவே அவதூறு வழக்குகளில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் வெளிவந்தவர் . தற்போது அவர் மீது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆத்திரமூட்டுவது, பொதுமக்களுக்கு பயம் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிரான குற்றம், வதந்தி அல்லது ஆபத்தான செய்திகளை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிஷோர் கே சாமி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஷங்கர் நகர் காவல் உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 16 ரவுடிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுள்ள காவல்துறை..!

இந்நிலையில், கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரித்துள்ளார். அது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், '' திமுக குடும்பத்தை,அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது. இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா? பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு; திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்'' என இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி