ஆப்நகரம்

மதுரையில் நேரடியாக குடோனில் இருந்து அரிசி மூட்டைகள் கடத்தல்?

மதுரை: ரேஷன் அரிசி கடத்தப்படாமல் இருப்பதை மாநில அரசி உறுதி செய்ய வேண்டும் என பாஜக எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 21 Jun 2021, 9:51 pm
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், கடத்தப்பட்ட அரிசி மூட்டைகள் அனைத்தும் நேரடியாக குடோனில் இருந்து கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள பாஜக மாநில தலைவர் எல். முருகன் இதுபோல தவறுகள் மேலும் நடக்காமல் இருக்க மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கடந்த வாரம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சுமார் 95 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி பிடிபட்டுள்ளது. கடத்தப்பட்ட அனைத்து ரேஷன் அரிசி மூட்டைகளும் நேரடியாக குடோனில் இருந்து கடத்தப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒரு சம்பவமே அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்று ரேஷன் அரிசி கடத்தப்பட்டு பல இடங்களில் பிடிபட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

கோடி கணக்கில் வருமானம்... செம்மையா வாழ்ந்த பப்ஜி மதன்..! வாயால் வந்த வினை...

இதேபோன்று, மாநிலம் முழுவதும் பிரதமர் மோடியால் வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசி முறையாக மக்களிடம் சென்று அடையவில்லை என்கின்ற தகவல் மக்கள் மூலமாக புகாராக வந்து கொண்டிருக்கின்றது. மாநில அரசானது மத்திய அரசு மக்களுக்கு வழங்கும் 5 கிலோ இலவச அரிசியை, எந்த ஒரு குறைபாடுகள் இல்லாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று குடோனில் இருந்து நேரடியாக ரேஷன் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து, இந்த தவறுகள் மேலும் நடக்காமல் இருக்க மாநில அரசு வழிவகுக்க வேண்டும்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி