ஆப்நகரம்

டூர் போவது போல் கொள்ளை: அசால்டா ஆட்டையப் போட்ட முருகன் கேங்!

திருவாரூர் முருகன், அவரது கூட்டாளிகள் கொள்ளைக்கு பயன்படுத்திய சொகுசு வேனை சமயபுரம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 19 Oct 2019, 11:36 am
கடந்த ஜனவரி 28ஆம் தேதி திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 479 சவரன் நகைகள், 19 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். ஆனால் 10 மாதங்களாகியும் வழக்கில் எந்தவித துப்பும் துலங்கவில்லை.
Samayam Tamil Untitled collage (11)


இந்நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜிவல்லரியில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்த திருவாரூர் முருகன், அவரது கூட்டாளிகள் சிக்கினர். அவர்களிடம் நடைபெற்றுவரும் விசாரணையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கொள்ளையடித்ததும் இதே கூட்டணி என்பது தெரியவந்தது.

அடேயப்பா.. கல்கி சாமியார் பதுக்கிய 500 கோடி: எவ்வளவு ரொக்கம், நகை, டாலர்கள்!

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் மணிகண்டன், சுரேஷ், கணேசன் ஆகியோரிடம் தமிழ்நாடு போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. முருகன் பெங்களூர் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளார்.

கணேசனிடம் மாவட்ட தனிப்படை நடத்திய விசாரணையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, லலிதா ஜுவல்லரி கொள்ளைகளுக்கு சொகுசு வேனை பயன்படுத்தியது தெரியவந்தது.

சுற்றுலா செல்பவர்கள் போல் சொகுசு வேனில் செல்வதால் காவல்துறையினருக்கு சந்தேகம் வராது என்பதால் இந்த வாகனத்தை தேர்வு செய்துள்ளனர். கொள்ளையடித்து விட்டு, முருகன் கும்பல் வேனில் ஓய்வெடுத்துள்ளனர். வாகனத்தில் திருட்டுக்கு தேவையான பொருள்கள், கேஸ் சிலிண்டர், எடை போடு மிஷினையும் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளையில் கிடைக்கும் நகைகளை உடனடியாக எடைபோட்டு பங்குபோட வசதியாக எடை போடும் மிஷினை வைத்திருந்ததாக கணேசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

லலிதா ஜுவல்லரி கொள்ளைப் பணத்தில் லஞ்சம்: சிக்குவார்களா காவல் துறையினர்?

மதுரை வாடிபட்டி கணேசன் பகல் நேரங்களில் சொகுசு வேன் ஓட்டுநராகவும், இரவில் கொள்ளையடித்தும் வந்துள்ளார். கணேசன் அடையாளம் காட்ட மறைத்து வைக்கப்பட்டிருந்த TN 40 W 6780 என்ற எண்ணுடைய வேனை காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான மாவட்ட தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தெலுங்கில் சினிமா எடுத்த ‘லலிதா ஜுவல்லரி’ முருகன்?

தொடர்ந்து கணேசனிடம் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் அவரை மதுரை மாவட்டம் சமயநல்லூர், வாடிப்பட்டி அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி