ஆப்நகரம்

சென்னையை அதிர வைக்கும் கொலைகள்!!

தலைநகரில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 19 Jul 2019, 3:55 pm
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் போக்ஸோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
Samayam Tamil Murder


கடந்த 3 ஆண்டுகளில் சென்னை மாநகரில் குற்றங்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 490 வழக்குகளில், பெரும்பாலானவை பலாத்காரம் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகரித்து வரும் குற்றங்கள் நமக்கு மிகுந்த எச்சரிக்கையை அளிக்கின்றன. இந்த சட்டம் தொடர்பாக பலரும் அறிந்து வைத்திருக்கின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து, உடனே எங்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். சென்னை மாநகர போலீசாரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில் 131 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 98 வழக்குகள் பதிவாகி உள்ளன. 131 வழக்குகளில் 89 பலாத்கார வழக்குகள் ஆகும். 2017 மற்றும் 2018ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பலாத்கார வழக்குகள் முறையே 84, 145 ஆகும்.

கோவை பியூட்டி பார்லரில் தூக்கு போட்டுக்கிட்ட இளம்பெண்- நடுநடுங்க வைக்கும் பின்னணி!

பெரும்பாலும் 15 முதல் 18 வயதுக்கு இடையே உள்ள பெண்கள், காதல் கொண்டு பலாத்கார சம்பவங்களில் சிக்கிக் கொள்கின்றனர். ஆண்களைப் பொறுத்தவரை 19 முதல் 23 வயது வரையில் உள்ளவர்கள் பலாத்கார சம்பவங்களில் அகப்பட்டு வருகின்றனர்.

Rajagopal Death: சரவண பவன் ராஜகோபால் அதுக்குள்ள செத்துட்டாரே; ஜீவஜோதிக்கு இப்படியொரு ஆத்திரம்!

நடப்பாண்டின் முதல் பதிவான 89 பலாத்கார வழக்குகளில் மேற்கூறிய வயதினர் தொடர்பாக மட்டும் 67 வழக்குகள் அடங்கும். இதுபோன்று 2018ஆம் ஆண்டு 87 வழக்குகள் பதிவாகி இருந்தன.

சிக்கன் பக்கோடா கேட்ட சிறுமிக்கு இப்படியொரு கொடூரமா- போதையில் இளைஞர் வெறிச் செயல்!

இந்த பலாத்கார சம்பவங்களில் சிக்கும் பெண்கள் பெரும்பாலும், தங்கள் சம்மதத்துடனே நடைபெறுவதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறினார்.

அடுத்த செய்தி