ஆப்நகரம்

ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் ரூபாய் மோசடி!

மதுரையில் ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த எல்ஐசி முகவர் உள்ளிட்ட இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Samayam Tamil 26 Jun 2019, 6:48 pm
மதுரையில் ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒட்டன்சந்திரத்தை சேர்ந்த எல்ஐசி முகவர் உள்ளிட்ட இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Samayam Tamil teacher arrested


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் நடராஜன் மற்றும் அலுமினிய பொருட்கள் வியாபாரியும் நடராஜனின் மைத்துனருமானமகுடீஸ்வரன் ஆகிய இருவரும் மதுரை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாகஅலுமினிய பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி புதிய ராமநாதபுரம் சாலையில் வசிக்கும் ராமமூர்த்தி மகன் துவாரகன் உள்ளிட்ட பல பேரிடம் ஏலச் சீட்டு நடத்துவதாக கூறியுள்ளர் ஒரு லட்சம் ரூபாய்முதல் 5 ரூபாய் வரைபல குரூப்களாகஏலச் சீட்டு நடத்துவதாக கூறியுள்ளார். துவாரகன் அவரது நண்பர்கள் என 5 பேரிடம்மாதா மாதம் மாதந்திரம் சீட்டுக்கு ரூ.12 ஆயிரத்து 500 வீதம் 25 மாதங்களில் 15 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார்.

பல மாதங்களாக கட்டிய பணத்தைகேட்ட போது ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. பதிவு பெற்று சீட்டு கம்பெனி நடத்தாததும், பணத்திற்கு சரியான பதில் இல்லாததால் சந்தேகமடைந்த பணம் செலுத்தியவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவுகாவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து மகுடீஸ்வரன், Lic நடராஜன் ஆகிய இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் தேடி வந்தனர்.

இந் நிலையில் தலைமறைவாக இருந்த2 பேரும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல பேரிடம் இவர்கள் இருவரும் ஆசை வார்த்தை கூறி ஏலச்சீட்டில் சேர்த்து பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. பின்னர் இருவரையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அடுத்த செய்தி