ஆப்நகரம்

வீரப்பனை சுட்டதற்காக கிடைத்த மெடலை திருடிட்டாங்க... சத்தியமங்கலம் எஸ்.ஐ. சோகம்...

கோயம்புத்தூரில் உள்ள எஸ்.ஐ. வீட்டில் பீரோவை உடைத்து பித்தளை,வெள்ளி மெடல்களை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 4 Nov 2019, 6:39 pm
சந்தன கிடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படும் வீரப்பன் கொல்லப்பட்டு 15 வருடங்கள் ஆகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தண்ணி காட்டிய வீரப்பனை இன்று நினைத்தாலும் கூட படபடப்பு தொற்றி கொள்ளும்.
Samayam Tamil loot of medal obtained by the deputy inspector for shooting veerappan in coimbatore
வீரப்பனை சுட்டதற்காக கிடைத்த மெடலை திருடிட்டாங்க... சத்தியமங்கலம் எஸ்.ஐ. சோகம்...


2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, வீரப்பனை பிடிக்க அதிரடி படையை உருவாக்கினார். இந்த படைக்கு தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமாரை நியமனம் செய்து உத்தரவிட்டார். இந்த ஆபரேஷனில் சரியாக 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த அதிரடி படையில் ஒருவராக இருந்தவர் ராயப்பன் (54). இவர் கோவை, சரவணம்பட்டி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று (02 .11 .2019) சத்தியமங்கலத்தில் சிறப்பு பணிக்காக சென்றுள்ளார். வீட்டில் இருந்த இவரது மனைவி லோகேஸ்வரி மற்றும் மகன் பிரதீப் இருவரும் காந்திபுரத்திற்கு சென்றுள்ளனர்.

காலை சென்ற இவர்கள் இரவு 12 .30 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன் கதவு திறக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டில் நுழைந்தால், இரும்பு பீரோ திறக்கப்பட்டிருந்த நிலையில் அதில் இருந்த மெடல்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட 4 மெடல்களும், ராயப்பனின் 25 வருட காவல் துறை பணி அனுபவத்தில் கிடைக்க பெற்றதென கூறுகிறார். அதில் ஒன்று, 2004 ஆம் ஆண்டு வீரப்பனை பிடிக்க தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு படையில் பணியாற்றியதில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட மெடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு ராயப்பன் எஸ்.ஐ ஆகவும் பணி உயர்த்தப்பட்டார். மேலும் பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதாக மெடல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை வீட்டில் இருந்த லாக் செய்யப்படாத பீரோவில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் ஈசியாக பீரோவை திறந்த அவற்றை எடுத்து சென்றுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட மெடல்களின் மதிப்பு 50 ஆயிரம் என்பதும் தெரிந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், வீட்டின் சிசிடிவி காட்சிகளை சேகரித்து, இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி