ஆப்நகரம்

பாலியல் துன்புறுத்தல்: குழந்தைகள் சாட்சியே போதுமானது - உயர் நீதிமன்றம்!

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, பாதிக்கப்பட்ட அவர்களை தவிர வேறு சாட்சியங்களை எதிர்பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 27 Oct 2021, 7:59 pm

ஹைலைட்ஸ்:

  • சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கிறது
  • பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு நேரடி அல்லது தனிப்பட்ட சாட்சியங்களையோ எதிர்பார்க்க முடியாது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில், ரூபனுக்கு 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ரூபன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூபன் தரப்பில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று அந்த இடத்தில் இல்லை என்றும், சிறுமியை தவிர வேறு சாட்சியங்கள் யாரும் இல்லாத நிலையில் தனக்கு தண்டனை வழங்கப்பட்டது தவறு என்று வாதிடப்பட்டது.

ஆனால், இதே சிறுமியிடம் ஏற்கனவே தவறாக நடக்க முயற்சித்ததாகவும், சிறுமி அளித்த வாக்குமூலம் தெளிவாக இருப்பதாகவும் அரசு தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அறியாமையையும், தனிமையுயும் பயன்படுத்தி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும்போது, பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு நேரடி அல்லது தனிப்பட்ட சாட்சியங்களையோ எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டார்.
கல்யாண ராமன் ஜாமீன் மனு தள்ளுபடி!
மேலும், இந்த வழக்கை பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்ட கோவை நீதிமன்ற தீர்ப்பு சரியானது எனக் கூறி, அதை எதிர்த்த ரூபனின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி