ஆப்நகரம்

மனைவியை கொல்ல படுக்கை அறைக்கு விஷ பாம்பை அனுப்பிய கணவர்..!

கேரளா அருகே மனைவியின் மீது ஏற்பட்ட வெறுப்பினால் விஷ பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த நபர் போலீசில் பிடிபட்டுள்ளார்.

Samayam Tamil 25 May 2020, 3:34 pm
கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் உத்ரா. இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018 இல் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.
Samayam Tamil விஷ பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த நபர் போலீசில் பிடிபட்டுள்ளார்


உத்ராவை திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர் கார், நகைகள் என போதுமென்ற அளவுக்கு வரதட்சணை கொடுத்துள்ளனர். எனினும் சூரஜ் மேலும் வரதட்சணை வேண்டுமெனக்கூறி உத்ராவை சித்ரவதை செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் உத்தரவை தீர்த்துக்கட்ட நினைத்த அவர், தடையுமின்றி எப்படி கொலை செய்யவது என்பதை குறித்து யூ டியூபில் தேடியுள்ளார். இந்நிலையில் சூரஜுக்கு சுரேஷ் என்ற பாம்பாட்டியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பாம்பாட்டி மூலமாக கரு மூர்க்கன் என்ற கொடிய விஷமுள்ள பாம்பை ரூ. 10 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கியுள்ளார் சூரஜ். அதனையடுத்து கடந்த மார்ச் 6ம் தேதி தனது அறையில் படுத்திருந்த உத்ராவிடம் பாம்பை அனுப்பி கடிக்க செய்துள்ளனர். இதனால் கதறி துடித்த உத்ராவை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

சிகிச்சை பெற்று வந்த உத்ரா தனது அம்மா வீட்டில் தங்கி வந்துள்ளார். உடல்நலம் தேறாததால் உத்தரவை அவரது பெற்றோர் உடனிருந்து பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் காலையில் படுக்கையில் இருந்த உத்ராவிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததால் மீண்டும் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று உத்ராவின் வீட்டுக்கு சூரஜ் வந்து சென்றதால், இதுவரை சத்தமின்றி காய் நகர்த்தி வந்த சூரஜ் மீது உத்ராவின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால், சூரஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ஏற்கெனவே மனைவியை பாம்பு கடிக்க செய்து கொல்ல முயற்சித்ததாகவும், ஆனால் எப்படியோ உத்ரா உயிர் பிழைத்துக்கொண்டதாகவும் கூறிய சூரஜ், மீண்டும் அதே பாம்பினை உத்ரா மீது தூக்கிப்போட்டு கடிக்க வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சூரஜையும், கொலைக்கு உடந்தையாக இருந்த பாம்பாட்டி சுரேஷையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி