ஆப்நகரம்

கொள்ளையடிக்க தடையாக இருந்த தாயும், மகனும் கொடூர கொலை!

திருத்தணி அருகே கொள்ளையடிக்க தடையாக இருந்த தாயும், மகனும் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 12 Apr 2019, 1:18 pm
திருத்தணி அருகே கொள்ளையடிக்க தடையாக இருந்த தாயும், மகனும் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil கொள்ளையடிக்க தடையாக இருந்த தாயும், மகனும் கொடூர கொலை!
கொள்ளையடிக்க தடையாக இருந்த தாயும், மகனும் கொடூர கொலை!


திருத்தணி அருகே பி.டி.புதூரைச் சேர்ந்தவர் வனப்பெருமாள். தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி (40). இவர்களது மகன் போத்திராஜ் (10) அதே பகுதியில் இயங்கும் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி வனப்பெருமாள் வழக்கம்போல் வேலைக்கு சென்று காலை வீட்டுக்கு திரும்பியபோது, மனைவியும், மகனும் கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 21 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, வெங்கடேசன் என்ற பால் வியாபாரி கடைசியாக அந்த வழியாகச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தபோது, அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பால் வியாபாரம் செய்துவரும் வெங்கடேசன் தொழில் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட கடன் தொல்லையால் கொள்ளையடிக்க திட்டமிட்டள்ளார். அதன்படி சம்பவத்தன்று காலை, வீரலட்சுமி முற்றம் தெளிக்க சென்றபோது அதனை பயன்படுத்தி வெங்கடேசன் பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தார்.

அப்போது வீரலட்சுமி சத்தம் கேட்டு வீட்டுக்குள் வர, நகைகளை கொடுக்குமாறு வெங்கடேசன் மிரட்டியுள்ளார். முகமூடி அணிந்தாலும் வெங்கடேசனின் குரலை அறிந்த வீரலட்சுமி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவரது மகன் போத்திராஜ் எழுந்து தனது தந்தைக்கு செல்போனில் அழைக்க முயற்சித்துள்ளான்.

இதையடுத்து வீரலட்சுமியை இரும்புக் கம்பியால் தாக்கியும், போத்திராஜை அயர்ன் பாக்ஸ் வயறை வைத்து கழுத்தை இறுக்கியும் வெங்கடேசன் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி