ஆப்நகரம்

இதுக்குதான் இதை 'தகாத உறவு' என்கிறார்கள்... எடுத்த செல்பிக்கள் எமனாக மாறிய சம்பவம்

ராமநாதபுரம் அருகே தனிமையில் இருந்த புகைப்படங்களை வாட்சப்பில் வெளியிட்ட காதலன் கைது

Samayam Tamil 25 Sep 2021, 4:50 pm
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வீரவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் நிஷா (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. பல நேரங்களில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர்.
Samayam Tamil தினேஷ்


அங்கு அறை எடுத்து தங்கியவர்கள் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது நிஷா சுதாரிக்காத நேரங்களில் தினேஷ் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில், மீண்டும் சொந்த ஊருக்கு இருவரும் வந்துள்ளனர். இந்த சூழலில் தினேஷ் நிஷாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

'' நான் ஏன் உனக்கு பணம் கொடுக்க வேண்டும்'' என்று நிஷா வாக்குவாதம் செய்தபோது, அந்த தனிப்பட்ட புகைப்படங்களை அவருக்கு அனுப்பி ' பணம் தராவிட்டால் இந்த புகைப்பங்களை அனைவருக்கும் அனுப்பி விடுவேன்' என தினேஷ் மிரட்டியுள்ளார். இந்த விவகாரம் நிஷாவின் கொழுந்தனுக்கு தெரிய வந்ததையடுத்து, தினேஷை நேரில் சந்தித்து தட்டி கேட்டுள்ளார்.

டவுரிக்காக அண்ணியை திருமணம் செய்த கொழுந்தன்..! மதுரையில் பகீர் சம்பவம்

அப்போது தினேஷும் அவரது நண்பர்களும் சேர்ந்து நிஷாவின் கொழுந்தனை அடித்து தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த தினேஷ் அணிக்காக சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும், தினேஷின் செல்போனை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல், அரவணைப்பு என்ற பேரில் தகாத உறவு மூலம் தாங்களாகவே சூனியம் வைத்துக்கொள்ளும் சில பேரால் அவர்களது வாழ்க்கையை மட்டுமல்ல அவர்களை சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சி.

அடுத்த செய்தி