ஆப்நகரம்

சென்னையில் தாய் வீட்டுப்பாடம் படிக்கச் சொன்னதால் மாயமான சிறுமி மீட்பு!

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தாமோதரன் இவரது மூத்த மகள் பவித்ரா (8). பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டு பாடத்தை படிக்க செல்லி, அவரது தாய் பவித்ராவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார்.

Samayam Tamil 2 Aug 2019, 10:37 pm
சென்னை அம்பத்தூர் அருகே தாய் வீட்டுப்பாடம் படிக்க சொன்னதால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான சிறுமியை ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
Samayam Tamil சென்னையில் தாய் வீட்டுப்பாடம் படிக்கச் சொன்னதால் மாயமான சிறுமி மீட்பு!
சென்னையில் தாய் வீட்டுப்பாடம் படிக்கச் சொன்னதால் மாயமான சிறுமி மீட்பு!


சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தாமோதரன் இவரது மூத்த மகள் பவித்ரா (8) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று வழக்கம் போல பள்ளி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டு பாடத்தை படிக்க செல்லி, அவரது தாய் மாணவியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். மகள் காணாமல் போனது தெரிந்து பதறிய பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் காணததால், சிறுமியின் பெற்றோர், உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நம்பி வந்த காதலியை கொலை செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன்!
சேலத்தில் குழந்தையை கடத்த முயன்ற பெண்?

சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக பெண் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்தப்பெண்ணை பிடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்தப்பெண்ணை மீட்டுச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடினர். அப்போது அவரது வீட்டில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில் இருந்த சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர். பின்னர் அம்பத்தூர் காவல் மாவட்ட துனை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தாய் வீட்டுப்பாடம் படிக்க சொன்னதால் சிறுமி மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டிவனம் அருகே மணமுடிந்த 20 நாளில் காதல் கணவனை எரித்து கொன்ற மனைவி!
தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. வேலைக்கு செல்லும் பெற்றோரால், சரிவர குழந்தைகளை கவனிக்க முடிவதில்லை. மேலும் தனிக்குடித்தனம் இருப்பதாலும் வீட்டில் தனியாக இருக்கும் சிறுவர், சிறுவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதை பயன்படுத்தி, சில கயவர்கள் குழந்தை கடத்திலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சம்பவங்களால் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெற்றோர்கள் பீதியடைந்து உள்ளனர்.
மரண தண்டனையை உறுதி செய்கிறோம்- சிறுமி வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரே வரியில் தீர்ப்பு!

அடுத்த செய்தி