ஆப்நகரம்

திருச்சி: வழிப்பறி கொள்ளையனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை!

திருச்சியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த மோகன் ராஜ் என்ற வழிப்பறி கொள்ளையனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Nov 2019, 7:01 am
தமிழ்நாட்டில் நகைப் பறிப்பு சம்பவங்கள் பரவலாக அனைத்து இடங்களிலும் அரங்கேறுகின்றன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழிப்பறி சம்பவத்தில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
Samayam Tamil திருச்சி வழிப்பறி கொள்ளையனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை


ஃபோன் செய்தால் போதும்...கஞ்சா டோர் டெலிவரி! : போலீசில் சிக்கிய ஐடி, ஐஐடி ஊழியர்கள்

திருச்சி உறையூர் கீழ சாராய பட்டறைத் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி சிவகாமி (51). 2015ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில், அதிகாலை, 5 மணிக்கு சிவகாமி தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த, உறையூர் சின்ன செட்டித் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (27) என்ற வழிப்பறி கொள்ளையன், சிவகாமி கழுத்தில் இருந்த, ஏழு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

மேலவளவு கொலை வழக்கு: சர்ச்சையைக் கிளப்பும் 13 பேர் விடுதலை!

இதுகுறித்து சிவகாமி கொடுத்த புகாரின்பேரில், உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மோகன்ராஜை கைது செய்து ஏழு சவரன் நகைகளை மீட்டனர். இதுகுறித்த வழக்கு, திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

சிலிண்டர் திருடிய வழக்கு: ‘லலிதா ஜுவல்லரி’சுரேஷிடம் விசாரணை!

அரசு தரப்பில் வழக்கறிஞர் ஹேமந்த் (ஏ.பி.பி) ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், துணிகர வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட, பிரபல வழிப்பறிக் கொள்ளையன் மோகன்ராஜுக்கு, ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அடுத்த செய்தி