ஆப்நகரம்

ஏமார்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள்... அழுது புரண்ட காட்சியால் பொதுமக்கள் கவலை..!

திருத்தணி அருகே காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் பெண்களிடம் 20 லட்சம் வரை ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் ஒப்பாரி வைத்த பெண்கள்.

Samayam Tamil 25 Jan 2022, 4:36 pm
திருத்தணி அருகே ஆற்காடு குப்பம், லட்சுமபுரம், போன்ற பகுதிகளில் பெண்களை குறிவைத்து 'அசுரே அக்ரோடெக் லிமிடெட்' என்ற பெயரில் சேலத்தைச் சேர்ந்த காப்பீடு நிறுவனம் போல் செயல்ப்பட்டு வந்துள்ளது.
Samayam Tamil thiruthani fake finance


கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு பெண்களிடமும் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையும், மேலும் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கிராமப்புறப் பெண்களிடம் வசூல் செய்துள்ளனர்.
இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசூல் செய்த பணத்தை இவர்களுக்கு வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறி விட்டு சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை திருப்பி பெண்களிடம் செலுத்தவில்லை என்று 20க்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

அப்போது,போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என்று புகார் தெரிவித்து உடனடியாக எங்களை ஏமாற்றி பணத்தை திருப்பித் தரவேண்டும், ஏஜென்டுகள் போலீஸ் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கின்றனர். அவர்களிடமிருந்து பணத்தை திருப்பி வாங்கி விரைவாக தரவேண்டும் என்று பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது போலீசார் பெண்களை திருப்பி அனுப்பியதால் அவர்கள் காவல் நிலையம் முன்பு ஒப்பாரி வைத்து அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்,. போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர், இதனால் பெண்கள் காவல் நிலையம் முன்பு அழுது கொண்டே அமர்ந்த காட்சி காவல் நிலையத்திற்கு வந்த பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

என்கவுண்டருக்கு பயந்து தலைமறைவான பிரபல ரவுடி படப்பை குணா சரண்..!

திருத்தணியில் அதிகளவு நிதி நிறுவனங்கள் போலியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் பல நிறுவனங்கள் ஏமாற்றி சென்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் 'இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ்' என்ற கம்பெனியில் திருத்தணியில் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி ஒரு லட்ச ரூபாய் கட்டினால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பொதுமக்களிடம் 50 கோடி வசூல் செய்து வருகிறதாம்.
இவர்கள் எந்த நேரத்திலும் ஏமாற்றலாம் என்று திருத்தணியில் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் மோசடியாக செயல்படும் நிதி நிறுவனங்களை மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி