ஆப்நகரம்

கோவில் முன்பு மாட்டிறைச்சியை வீசிச்சென்ற மர்ம நபர்கள், கோவையில் பரபரப்பு..!

கோவையில் கோவில் முன்பு மர்ம நபர்கள் இறைச்சியை வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 29 May 2020, 3:51 pm
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வழிபாட்டு தளங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் சூழலில், கோவையில் கோவில் முன்பு இறைச்சி கொட்டப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil கோவில் முன்பு மாட்டிறைச்சியை வீசிச்சென்ற மர்ம நபர்கள்


கோவை டவுன்ஹாலை அடுத்த சலீவன் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. கொரோனா காரணமாக இந்த கோவிலும் அடைக்கப்பட்டுள்ள சூழலில், இன்று காலை கோவில் கதவின் முன்பு இறைச்சியை சிலர் கொட்டிச் சென்றுள்ளனர்.

காலை கோவில் முன்பு வந்த மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலத்தில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்..! குறி எந்த பெண்களுக்கு?

இதன் காரணமாக கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் தலைவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலையை அவமதித்தல் போன்ற சம்பவங்கள் நடந்துவந்த நிலையில், இப்படி கோயில் முப்பு இறைச்சி கொட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி