ஆப்நகரம்

தனக்குத்தானே சங்கூதிக்கொண்ட நாதக தம்பி... பெரம்பலூரில் பரபரப்பு..!

முதலமைச்சர் ஸ்டாலின் குடித்து சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழா் கட்சியை சேர்ந்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 4 May 2023, 2:02 pm
திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தலைவர் ஸ்டாலின் முதற்கொண்டு நிர்வாகிகள் வரை ஆவேசமாக பேசி விமர்சித்து வருகிறார். அவரை பின்தொடரும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களும் இதேபோல விமர்சித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
Samayam Tamil ntk


குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கு கடுமையான கருத்து மோதல் இருந்து வருகிறது. அசிங்கசிங்கமாக திட்டிக்கொள்கின்றனர். சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மோதிக்கொள்வதை போல நாதக - திமுகவினர் மோதிக்கொள்கின்றனர். ஆனால், ஆட்சி அதிகாரம், படை - பண பலமும் இருப்பதால் நாம் தமிழர் தம்பிகளுக்கே சேதாரம் ஏற்படுகிறது .

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சோ்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ராமச்சந்திரன் என்பவர் ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து அவதூறு பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. அதற்கு ராமச்சந்திரன் '' வீட்ல தாண்டா இருக்கேன் வரச்சொல்லுடா'' என்று கெத்தாக ட்வீட் போட்டுள்ளார். இந்த நிலையில், ராமச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி பிடித்து கைது செய்துள்ளனர். போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து வாகனத்தில் கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து இணையத்தில் வீடியோ, புகைப்படம், கருத்துக்களை பதிவிடுவோர்கள் அவதூறு வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள். இதில் பெரும்பாலும் திமுகவுக்கு எதிரான கட்சிகளை சேர்ந்தவர்களே அதிகம். அந்த வகையில் அண்மை காலமாக நாம் தமிழர் கட்சியினர் மீது தொடர்ந்து இதுபோன்ற வழக்குகளில் சிக்கி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் மிக முக்கிய இளம் பேச்சாளராக இருந்து வரும் இடும்பாவனம் கார்த்திக் கோவையில் பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து SDPI நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாக பேசியதாக உக்கடம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் இடும்பாவனம் கார்த்தி மீது பிரிவு 153 (a) (i) (a) மற்றும் (505) (ii) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி