ஆப்நகரம்

உயிரைக் குடித்த விளையாட்டு: அல்லி நகரம் பள்ளியில் நடந்த விபரீதம்!

தேனி அருகே அல்லி நகரம் அரசு பள்ளியில் மாணவர்களிடையே விளையாட்டாக ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார். பலியான மாணவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 11 Oct 2019, 7:08 pm
தேனி அருகேயுள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இப்பள்ளியில் வணிகவியல் பிரிவில் அல்லிநகரம் கம்பர் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் திருமால் (17), அல்லிநகரம் அழகர் சாமி காலனியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சக்திவேல் (17) படித்துவந்தனர். இன்று பிற்பகல் உணவு இடைவேளைக்காக இருவரும் அவரவர் வீட்டிற்குவந்து உணவுஅருந்திவிட்டு பின்னர் பள்ளிக்குச் சென்று வகுப்பறையில் அமர்ந்துள்ளனர்.
Samayam Tamil Untitled collage (10)


சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ஜுவெனில் மலைப்பாம்புகள், பல்லிகள்.. அதிர்ச்சி வீடியோ...!

இந்த இரு மாணவர்களும் ஒருவரையொருவர் விளையாட்டாக அடித்து விளையாடியதாகவும் ஒருவரையொருவர் தள்ளிவிட்டும் விளையாடியுள்ளனர். இந்தவிளையாட்டு ஒருகட்டத்தில் மோதலாக மாறி தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரையொருவர் கழுத்தை நெரித்து சண்டை போட்டுள்ளனர். இதில் திருமால் வகுப்பறையில் மயக்கமடைந்தார். இது குறித்து பள்ளிஆசிரியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

மாணவிகளிடம் சில்மிஷம்; சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர்- போக்சோவில் கைது!

மாணவனை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறிவிட்டனர். பின்னர் மாணவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கிடையே இறந்த மாணவரின் உறவினர்கள் தாக்கிய மாணவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி அல்லிநகரம் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகஅப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே மாணவனை தாக்கிய சகமாணவர் சக்திவேலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த செய்தி