ஆப்நகரம்

நெல்லை குவாரி விபத்து: தலைமறைவான ஓனர் மங்களூருவில் கைது..!

மங்களூரில் தலைமறைவாக இருந்த நெல்லை குவாரி உரிமையாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 20 May 2022, 6:41 pm
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் திசையன் விளையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான சேம்பர் செல்வராஜ் அவரது மகன் குமார் ஆகியோருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியில் கடந்த 14ம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil nellai accident


மீதமுள்ள லாரி டிரைவர் ராஜேந்திரனனை மீட்கும் பணிகள் நடத்து வருகிறது. இந்த கல்குவாரியில் பல்வேறு விதிமீறல்களில் செயல்பட்டது தெரியவந்தது எனவே குவாரி உரிமையாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுநரத்து ஆனால் விபத்து நடைபெற்ற அன்றே உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குவாரி உரிமையாளர் சங்கர நாராயணன் மற்றும் மேலாளர் ஆகிய இருவரை மட்டும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

'ஏம்பா குடிக்கிற'... கேள்வி கேட்ட மகள்களை கட்டையால் அடித்து கொன்ற தகப்பன்...

அவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மங்களூரில் உள்ள தனியார் ஓட்டலில் செல்வராஜ் மற்றும் மகன் குமார் இருவரும் தங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரும் நெல்லை அழைத்துவரப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

அடுத்த செய்தி