ஆப்நகரம்

கூலி மிச்சம்னு நினைச்சா ஆபத்து.. புத்தியை காட்டிய பிகார் வாலிபர்.. காவலாளி கொலை

சேலத்தில் தனியார் பருப்பு மில்லில் காவலாளியை கொலை செய்த வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 11 Feb 2023, 4:46 pm
சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கையா(52). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பருப்பு மில்லில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
Samayam Tamil crime


இந்த நிலையில் நேற்று இரவு மில்லில் காவலர் பணியில் இருந்த அவர் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்துடன் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை பார்த்த பருப்பு மில் உரிமையாளர் பாஸ்கர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சடலத்தை பார்த்த உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புக்கர் அளித்தனர்.

இந்நிலையில், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, காவலாளி தங்கையா கொலை செய்யப்பட்டதாக அறிகுறிகள் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தெரிவித்தனர். விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார் தொழிற்சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குறித்து செல்வது பதிவாகியிருந்தது. இதனையடுத்து, மில் உரிமையாளரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.

போதையில் ஞாபகத்துக்கு வந்த நண்பனின் மனைவி.. முடிவில் நடந்த கொலை..! நெல்லை பகீர்

அதில், சில நாட்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வேலை கேட்டு பருத்தி மில்லுக்கு வந்துள்ளனர். வழக்கமாக பருத்தி மூட்டைகளை ஏற்ற உள்ளூர் தொழிலாளர்கள் 800 ரூபாய் கூலி கொடுத்து வந்துள்ளார் உரிமையாளர். ஆனால், இந்த இரண்டு வடக்கர்களும் 500 கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளனர். இதனால் 300 ரூபாய் லாபம் என்று நினைத்த உரிமையாளர் பாஸ்கர் அந்த இளைஞர்களில் ஒருவரது செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். அதன் பின்னர் சொன்ன நாளில் ஒரு இளைஞர் வேலைக்கு வரவில்லை என போலீசாரிடம் பாஸ்கர் தெரிவித்தார். உடனே போலீசார் அந்த செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்து சூரமங்கலம் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு காத்திருந்த வட மாநில இளைஞரை பிடித்து விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது, அந்த நபர் பிகாரை சேர்ந்த அமரஜித் குமார் என தெரிய வந்தது. இவர் சம்பவத்தன்று பருத்தி மில்லுக்குள் சுவர் ஏறி குதித்து கல்லாப்பெட்டியில் இருந்த 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டு போகும்போது தடுக்க வந்த காவலாளி தங்கையாவை தள்ளிவிட்டு சென்றதாகவும் அதனால் அடிபட்டு தங்கையா இறந்ததாக வாலிபர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், வட மாநில வாலிபர் அமரஜித் குமார் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர்.

அடுத்த செய்தி