ஆப்நகரம்

ஏடிஎம் கார்டு நம்பர் போதும்; உங்க பணம் அபேஸ் - வேலூரில் சிக்கிக் கொண்ட முதியவர்!

வேலூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் செல்போன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்த பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Oct 2019, 11:42 am
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆலாம்பட்டரை கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயபாலன். இவர் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி, பின்னர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Older Man


இவரது செல்போனிற்கு சமீபத்தில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் இந்தியில் ஒரு நபர் பேசியுள்ளார். அப்போது, நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் வங்கிக் கணக்கின் ஏடிஎம் எண்ணைக் கூறுங்கள் என்று கேட்டுள்ளனர்.

500 கோடியை வளைத்த கல்கி சாமியார் ‘எஸ்கேப்’: திகைக்கும் அதிகாரிகள்!

அதனை நம்பி ஜெயகோபாலன் தனது ஏடிஎம் எண்ணை கூறியுள்ளார். அதன்பிறகு தான் அதிர்ச்சி காத்திருந்தது. உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22,250 பணம் எடுக்கப்பட்டு விட்டது என்று செல்போனிற்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயகோபாலன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். இதுபற்றி குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களும் குழந்தைகளும் இருக்க,.. ரூம் எடுத்து தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்..!

இதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொலைபேசி அழைப்புகள் மூலம் வங்கிக் கணக்கு தொடர்பான எந்தவொரு தகவலையும் தெரிவிக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன.

இருப்பினும் வயதானவர்கள் வெகுளித்தனமாக கயவர்களின் கைகளில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இனி வரும் காலங்களில் வங்கிகளின் அறிவுறுத்தலின்படி, செல்போன் மூலம் யாரிடமும் எந்தவொரு தகவலையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

தஞ்சாவூர்: ஆண்களிடம் வழிப்பறி, பெண்களுக்கு பாலியல் பலாத்காரம்..! லோக்கல் கொள்ளையன் கைது..!

அடுத்த செய்தி