ஆப்நகரம்

திருப்பதியில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

வேலூர் மாவட்டம், பொன்னை சோதனை சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 13 Feb 2019, 5:34 pm
வேலூர் மாவட்டம், பொன்னை சோதனை சாவடியில் திருப்பதியில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil திருப்பதியில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
திருப்பதியில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!


வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே, தமிழக ஆந்திர எல்லையான பொன்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து அதிவேகமாக வந்த காரை மறித்து சோதனையிட முயன்ற போது காரில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதனால் சந்தகமடைந்த போலீசார் காரை திறந்து பார்த்த போது அதில் சுமார் ஒரு டன் எடையுடைய 23 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தப்பியோடியவர்களை துரத்தி சென்ற போலீசார், ஒருவரை மட்டும் கைது செய்ததோடு செம்மரங்களை ஏற்றி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்துர் மலைக்கிராமத்தை சேர்ந்த ஜெயபால்(27) என்பதும், கடத்திவரப்பட செம்மரக்கட்டைகள் திருப்பதியிலிருந்து பொன்னை மற்றும் சோளிங்கர் வழியாக சென்னைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரகடைகள் முதல் தரத்தை சேர்ந்தது எனவும் இதன் சந்தை மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செம்மரக்கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அடுத்த செய்தி