ஆப்நகரம்

அரசு மருத்துவமனையில் நள்ளிவில் புகுந்து நோயாளி மீது தாக்குதல்!

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் புகுந்து நோயாளியை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 26 Mar 2019, 11:57 am
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் புகுந்து நோயாளியை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Samayam Tamil அரசு மருத்துவமனையில் நள்ளிவில் புகுந்து நோயாளி மீது தாக்குதல்!
அரசு மருத்துவமனையில் நள்ளிவில் புகுந்து நோயாளி மீது தாக்குதல்!


வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளைக்குட்டை பகுதியை சேர்ந்த முருகன். இவரும் தீர்த்தகிரி என்பவரும் அரசு தரப்பில் வீடுகளில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் நேற்று உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு, பணிக்கு செல்லாமல் கட்சிகொடி கம்பம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதை பார்த்த தீர்த்கிரி உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு கட்சி கொடிக்கம்பம் மட்டும் போடுகிறாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு, இருவரும் வாணியம்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

இந்நிலையில் நேற்று மாலை, தீர்த்தகிரியின் மகன் மோகன் மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய தந்தையிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் தன் தந்தையை தாக்கிய முருகனை பழிவாங்கும் நோக்கத்துடன் நள்ளிரவில் அரிவாளுடன் அரசு மருத்துவமனைக்கு புகுந்த மோகன், முருகனை கை, கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டான்.

நோயாளி அலறும் சத்தம் கேட்டு அங்கே வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வெட்டு பட்டவருக்கு முதலுதவி அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் காவலர் இருந்தும் நள்ளிரவில் மருத்துவமனையில் புகுந்து முருகனை சரமாரியாக வெட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி