ஆப்நகரம்

அடப்பாவிகளா... ஏடிஎம்மில் வந்த கள்ள நோட்டுக்கள்; தெறித்து ஓடிய பொதுமக்கள் - நாமக்கல் அதிர்ச்சி!

பிரபல வங்கியின் ஏடிஎம்மில் கள்ள நோட்டுக்கள் வந்த விவகாரம், பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 16 Jul 2019, 1:46 pm
நாமக்கல்லில் மின் வாரிய ஊழியராக பணியாற்றி வருபவர் மூர்த்தி. இவர் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்கச் சென்றார். ரூ.40,000 பணத்தை இரு தவணைகளாக எடுத்துள்ளார்.
Samayam Tamil Fake Notes


ஆனால் கையில் எடுத்த நோட்டுகளை பார்த்த போது, மூர்த்தி பெரும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அவற்றில் ரூ.10,000 மதிப்பிலான நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்துள்ளன.

தண்ணீருக்காக வெடித்தது சண்டை; உடைந்தது மண்டை- குழாய் அடியில் ஒருவர் கொலை!

மேலும் ஐந்து ரூ.2,000 நோட்டுகள் கிழிந்து ஒட்டப்பட்ட நிலையில் இருந்தன. உடனே அருகிலுள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த நோட்டுகளைப் பெற்றுக் கொண்ட போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனியில் 4 வயது சிறுவன் அடித்து கொலை!

இதுதொடர்பாக வங்கி மேலாளரிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட தனியார் ஏஜெண்ட்களிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.

அதிர்ச்சி சிசிடிவி- உறங்கும் பெற்றோரிடம் இருந்து குழந்தையை நைசா தூக்கிச் சென்ற திருடன்!

இந்த சூழலில் மூர்த்திக்கு ரூ.10,000க்கான மாற்றுப் பணம் வங்கி சார்பில் வழங்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களால் வங்கிகள் மீதான மதிப்பு மக்களிடம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி