ஆப்நகரம்

இரவு நேரம், ரயில்வே நிலையத்தில் சுற்றிய மன நலம் பாதித்த சிறுமி..! ஆசாமி மீது போக்சோ வழக்கு...

சென்னையில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி திரிந்த சிறுமியை அழைத்து சென்று பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 9 Jul 2020, 9:15 pm
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பாட்டியின் ஆதரவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டியுடன் ஏற்பட்ட சண்டையில் அச்சிறுமி கோபித்துக்கொண்டு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
Samayam Tamil file pic


பெரம்பூர் ரயில்வே நிலையத்தில் சுற்றி திரிந்த அவரை வெங்கடேசன் என்பவர், '' நான் உனக்கு துணையாக இருக்கிறேன். என்னுடன் வா நன்றாக பார்த்துக்கொள்வேன் என கூறி தன்னுடைய ஊரான திருத்தனிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் வெங்கடேசனின் தாய், அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அதையும் மீறி வெங்கடேசன் சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி வீட்டில் தங்கவைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதனால் வெங்கடேசனுக்கும், அவரது தாய்க்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெங்கடேசன் பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்ட நிலையில், சிறுமியை காப்பாற்றும் நோக்கில் அவரை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதையடுத்து, திருத்தனி ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுமியை அங்கிருந்த போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, வெங்கடேசன் செய்தவற்றை அப்படியே போலீசாரிடம் தெரிவித்துள்ளார் அந்த சிறுமி.

அதனை அடுத்து, சிறுமியை தனது பாட்டியிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்த போலீசார், வெங்கடேசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வசமாக மாட்டிக் கொண்ட கேங்ஸ்டர் விகாஸ் துபே; அதுவும் இப்படியொரு சூழலில்!

தமிழகத்தில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த சூழ்நிலையில், வயதான பாட்டியிடம் கோபித்துக்கொண்டு வெளியே வந்த சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி