ஆப்நகரம்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை... அதிமுக வக்கீல் உள்ளிட்ட மூவர் மீது போக்சோ

நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த அதிமுக வக்கீல் உள்ளிட்ட 3 நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 23 May 2022, 1:49 pm
கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பிளஸ் டூ படித்த பெண்கள் பலர் நர்சிங் படிப்பில் நேரடியாகவும், விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த பிளஸ் டூ முடித்த மாணவி மூன்று ஆண்டு நர்சிங் வகுப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீலை 07ந் தேதியன்று சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
Samayam Tamil karur pocso arrest


இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவியை கல்லூரி முதல்வரும், முன்னாள் அரசு வக்கீல் அதிமுக மாவட்ட பிரதிநிதியுமான செந்தில்குமார் மாணவியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியும் தகாத வார்த்ததையால் திட்டி அடித்துள்ளார். இதற்கு விடுதி வார்டன் அமுதவள்ளி மற்றும் சமையலர் மகாலட்சுமி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி கரூர் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்படி கல்லூரி முதல்வர் செந்தில்குமார், வார்டன் அமுதவல்லி, சமையலர் மகாலட்சுமி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவியின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை..? திருச்சியில் பரபரப்பு

கல்லூரி முதல்வரும் வழக்கறிஞருமான ஒருவர் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்து மிரட்டி வந்த சம்பவம் குளித்தலை பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி