ஆப்நகரம்

உனக்கு என் பேரன் வயசு தம்பி... மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்த நபர்...

டெல்லியில் மூதாட்டியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Samayam Tamil 9 Sep 2020, 4:16 pm
டெல்லியின் சாவ்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் 90 வயதான மூதாட்டி. இவர் நேற்று மாலை 5 மணி அளவில் பால் விநியோகம் செய்யும் நபருக்காக கையில் பாத்திரத்துடன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபரொருவர், இன்று பால்காரர் வரமாட்டார், எனக்கு தெரிந்த வேறொரு இடம் உள்ளது அங்கு சென்று பாலை வாங்கிக்கொள்ளுங்கள் எனக்கூறி தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்.
Samayam Tamil victim


அங்கிருந்து புறப்பட்ட வாகனம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பண்ணை பகுதிக்கு சென்றது. அங்கு வாகனத்தை நிறுத்திய அந்த நபர், மூதாட்டியை பலவந்தமாக இழுத்துக்கொண்டு மறைவான பகுதிக்கு கொண்டு சென்றார். அங்கு நடக்கவே முடியாமல் இருந்த மூதாட்டியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் அந்த நபர். வலியால் துடித்த அந்த மூதாட்டி, உனது பாட்டியை போன்ற என்னை இப்படி செய்யலாமா என்று கெஞ்சியுள்ளார்.

ஆனாலும், அதை கண்டுகொள்ளாத அந்த நபர் மீண்டும் மீண்டும் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து ரத்த காயங்களுடன் கதறிய மூதாட்டியின் அழுகுரலை கேட்ட அப்பகுதியே சென்ற ஒருவர், மூதாட்டியிடம் நடந்ததை கேட்டறிந்து பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த போலீசார் மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

தென்காசி தொழிலதிபர் வீட்டில் துணிகரம்! மனைவியை கட்டிப்போட்டு கைவரிசை

அதன்படி குற்றவாளியை கைது செய்த போலீசார் கூறியதாவது, '' மூதாட்டியை பலாத்காரம் செய்தது கான்பூரைச் சேர்ந்த சோனு (33) என்பவர்தான். அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் மற்றும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதற்கான தண்டனை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட மூதாட்டியின் தனிப்பட்ட இடங்களில் பயங்கர ரத்த காயங்கள் உள்ளன. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வன்கொடுமை செய்யப்பட்டதான ஆதாரங்களை சேகரித்துள்ளோம்'' என தெரிவித்தனர்.

இந்த கொடூர சம்பவத்துக்கு டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் தெரிவித்ததாவது, 6 மாத சிறுமி முதல் 90 வயது பெண் வரை டெல்லியில் யாரும் பாதுகாப்பாக இல்லை. இந்த குற்றத்தை செய்தவர் மனிதனே அல்ல என்பதை தெளிவாகக் குறிக்கிறது. நான் இன்று அந்த மூதாட்டியை சந்தித்தேன், அவர் மிகவும் தைரியமான பெண். அவருக்கு நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இந்த வழக்கை விரைவாகக் கண்காணிக்க வேண்டும், ஆறு மாதங்களுக்குள் நீதி வழங்கப்பட வேண்டும்'' என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி