ஆப்நகரம்

நாகை போலீசில் சிக்கி கேரளாவில் கம்பி எண்ணும் மாரி..!

திருவனந்தபுரத்தில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாலிபரை நாகர்கோவில் போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.

Samayam Tamil 28 May 2020, 7:56 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள செட்டிக்குளம் சந்திப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இரு சக்கர வாகனத்தில் அந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது அந்த வாலிபர் ஓட்டம் பிடித்துள்ளார்.
Samayam Tamil நாகை போலீசில் சிக்கி கேரளாவில் கம்பி எண்ணும் மாரி


அவரை விரட்டி மடக்கி பிடித்த நாகர்கோவில் கோட்டார் போலீசார் நடத்திய விசாரணையில் " அந்த வாலிபரின் பெயர் அஜ்மல்கான் என்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டுக் கடை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

பெண் போலீசையும் விட்டுவைக்காத முகநூல் காதல்..! மொட்டை அங்கிளின் லீலை...

மேலும், இவர் மீது திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .தகவலறிந்து வந்த திருவனந்தபுரம் போலீசார் அஜ்மல்கானை கேரளா அழைத்துச் சென்றனர்.

மேலும் அந்த வாலிபரின் உடமைகளை சோதனை செய்த போது இரண்டு கத்தி மற்றும் கஞ்சா பொட்டலங்கள்,இரு சக்கர வாகனத்தையும் 10 போலி சிம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி