ஆப்நகரம்

விழுப்புரத்தில் தொடர்ந்து கைவரிசை காட்டியவர் கைது!

விழுப்புரத்தில் தொடர் வழிப்பறி, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

Samayam Tamil 14 Apr 2021, 10:57 pm

ஹைலைட்ஸ்:

  • அறிவழகன் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்
  • காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
விழுப்புரத்தையடுத்த மரகதபுரம் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி சாலையின் ஓரமாக கையில் குழந்தையுடன் நின்றிருந்த கவியரசி என்ற பெண்ணின் தலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் இரும்பு ராடால் தாக்கிவிட்டு அப்பெண் அணிந்திருந்த 11 சவரன் தங்க தாலி, செயின் உள்ளிட்டைவைகளை பறித்து சென்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் வி.பாளையம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த கடலூர் முள்ளிகாரம்பட்டு பகுதியை சார்ந்த அறிவழகன் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதனையடுத்து அறிவழகனை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்தும், தனியாக நிற்கும் பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

கர்ப்பிணி மகளை சுட்டுக் கொன்ற தந்தை: விருந்துக்கு வந்தபோது கொடூரம்!
மேலும், அறிவழகன் மீது கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தாலுகா போலீசார் அறிவழகனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 11 சவரன் தங்க நகைகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்த போலீசார் விழுப்புரம் வேல்ராம்பட்டு சிறையில் அவரை அடைத்தனர்.

அடுத்த செய்தி