ஆப்நகரம்

தக்காளி பெட்டிக்குள் மறைத்து கடத்தல்; அதிர்ச்சியில் கேரள போலீஸ்!

மினி லாரியில் வெடிபொருட்களை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 15 Nov 2020, 4:59 pm
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடி முடிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் காற்று மாசுபாட்டால் பல்வேறு மாநிலங்கள் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்திருந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் விதிகளை மீறுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
Samayam Tamil Kerala Arrest


இந்நிலையில் கேரள மாநிலம் வாளையாறு சோதனைச் சாவடியில் கேரள மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தமிழகத்தில் இருந்து வந்த மினி லாரியை மடக்கினர்.

அதில் சோதனை செய்கையில் தக்காளி பெட்டிகள் ஏராளமாக இருந்தன. அவற்றுக்கு உள்ளேயும், அடியிலும் சோதனை செய்தனர். அவற்றை எடுத்துப் பார்க்கையில் குவாரியில் இருக்கும் பாறைகளை வெடிக்க வைக்கும் வெடிபொருட்கள் இருந்தன.

மேஜராகாத சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர்: போக்சோவில் சிறை!

அதாவது 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 7 ஆயிரத்து 500 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவை பல லட்ச ரூபாய் மதிப்பிலானது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவற்றை முறைகேடாக சேலத்தில் இருந்து அங்கமாலிக்கு கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் பிரபு(30) மற்றும் ரவி(38) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி