ஆப்நகரம்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்...

இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள், மற்றும் மான்,சிங்கம் உள்ளிட்டவைகளின் கொம்பு பற்களை கடத்திய முக்கிய கடத்தல் ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

Samayam Tamil 5 Jun 2020, 7:44 pm
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் வழியாக, இலங்கைக்கு மர்மப் படகில் கடத்த முயன்ற ரூ.7 கோடி மதிப்பிலான 11 கிலோ போதை பொருட்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் கடந்த மார்ச் 21ல் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil இலங்கை கடத்தல்


இது தொடர்பாக 9 பேரை கைது செய்து கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளி குறித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டோர் அளித்த தகவல்படி, தனிப்படை போலீசார் ஒரு கிலோ 130 கிராம் எடையுள்ள ஹெராயின், 300 கிராம் கொக்கைன் உள்பட ரூ. ஒரு கோடி மதிப்பிலான 2 கிலோ 600 கிராம் போதைப் பொருட்கள், மற்றும் அரியவகை மான் கொம்புகள், சிங்கப்பற்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இப்பொருட்களை பதுக்கிய சர்வதேச கடத்தல்கும்பல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தீவிர விசாரணை செய்து, இச்சம்வங்களில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்.

இளைஞரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்திய போலீஸ்..! அமெரிக்க சம்பவம் இந்தியாவில்..?

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள்கள் மற்றும் மான் கொம்பு, சிங்கத்தின் பற்களை பறிமுதல் செய்துள்ளோம்.

இவைகள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் இதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது எனவும், கடத்தல் கும்பல் தரப்பில் இதன் சர்வதேச மதிப்பு சுமார் ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை இருக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

அடுத்த செய்தி