ஆப்நகரம்

கர்ப்பிணி மருத்துவர் தற்கொலை? கணவரின் டார்ச்சரால் சிதைந்த வாழ்க்கை

ராமநாதபுரம் அருகேமருத்துவர் மனைவியை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய மருத்துவர் கணவர் தலைமறைவு. விசாரணை தீவிரம்

Samayam Tamil 14 Nov 2021, 12:42 pm
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணிபுரிபவர் சுகந்தா 31 வயதான இவருக்கும், ராமநாதபுரம் அருகே உள்ள சடையன் வலசை கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2019 ம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஏற்கனவே இரண்டு முறை கர்ப்பமான சுகந்தாவை கணவர் கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்துள்ளார். தற்போது சுகந்தா மூன்றாவது முறையாக கர்ப்பமாகி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
Samayam Tamil ramanathapuram woman suicide


இந்நிலையில், மகேஸ்வரன் மேல் மருத்துவ படிப்பிற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்... பின்பு ஊருக்கு வந்து சுகந்தாவை ஒரு மாதம் விடுப்பு எடுக்க சொல்லி டெல்லிக்கு கூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ராமநாதபுரம் வந்து பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்- மனைவி இருவரும் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில், சுகந்தா தனது தாயார் சரஸ்வதிக்கு அடிக்கடி போன் செய்து, என் கணவர் வேலைக்கு போகக் கூடாது என்றும், மேல் படிப்புக்கு செல்லக் கூடாது என்றும் அசிங்கமாக பேசி, அடிக்கடி மிரட்டி துன்புறுத்துவதாகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுகந்தா தனது கணவர் கொடுமை தாங்காமல் 2 தினங்களுக்கு முன்பு எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து மயங்கிய நிலையில் கிடந்த சுகந்தாவை, கணவர் மகேஷ்வரன் உடனடியாக உள்ளூர் மருத்துவ மனையில் சேர்க்காமல் மிகவும் தாமதமாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி சுகந்தா உயிரிழந்துள்ளார்.


தனது மகளை கொடுமைப்படுத்தி எலிபேஸ்ட் சாப்பிட காரணமாக இருந்த டாக்டர் மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சுகந்தாவின் தாய் சரஸ்வதி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் மகேஸ்வரன் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாணவி மரணம்: கைதான பள்ளி முதல்வரிடம் தீவிர விசாரணை...

மேலும், தன் மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கணவர் டாக்டர் மகேஸ்வரனை உடனடியாக கைது செய்யக் கோரியும், தன் மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவரது கணவர் மகேஷ்வரனே மருத்துவமனை நிர்வாகத்திற்கான அனைத்து செலவுகளையும் செலுத்தி மகளின் உடலை பெற்று தரவேண்டுமெனக் கோரி பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து டி.ஐ.ஜி மயில்வாகனன், எஸ்.பி கார்த்திக் உள்ளிட்டோர் பெற்றோர்கள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர், மேலும் இதுகுறித்து நாளை மதுரை ஆர். டி. ஒ. கோர்ட் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி உடல் ஒப்படைக்கப்படும் என தெரியவருகிறது. தற்போது மருத்துவர் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி