ஆப்நகரம்

மருத்துவக் கல்லூரியில் சீட்: மோசடியில் ஈடுபட்ட பாதிரியார் கைது!

சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கிதருவதாக ரூ.57 லட்சம் மோசடி செய்ததாக பாதிரியார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 19 Oct 2020, 7:56 pm
வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக பாதிரியார் உட்பட மூவர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil Christian Medical College Vellore


செங்கல்பட்டு மாவட்டம் காரணிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகனுக்கு வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் இடம்பெற்றுதருவதாக கூறி 2017ஆம் ஆண்டு 57 லட்சம் ரூபாய் பணத்தை சாய்நாதபுரத்தில் உள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றும் சாது சத்தியராஜ், தமிழக முன்னேற்ற கழகத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் தேவா, அவரது தம்பி அன்பு கிராங்க் ஆகிய மூவரும் பெற்றுள்ளனர்.

இதுவரையில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தரவில்லை. அத்துடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதுடன் பணத்தை திருப்பி தரவும் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.சி. அறையில் முரட்டுத் தூக்கம்: பீரோவை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையர்கள்!

இதுகுறித்து சீனிவாசன் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் தேவா, சத்தியராஜ் , அன்பு கிராங்க் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூரில் பாதிரியார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி