ஆப்நகரம்

மதுரை: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - நாம் தமிழர் கட்சியினர் 80க்கும் மேற்பட்டோர் கைது

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக்கோரி திருமங்கலத்தில் தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடத்தியதால் 80க்கும் மேற்பட்டோர் கைது

Samayam Tamil 26 Dec 2021, 7:18 pm
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு நாம் தமிழர் கட்சியினர் கடந்த 20 ஆண்டு காலமாக சிறையிலிருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் அனுமதி மறுத்ததால் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை மதிவாணன் உள்பட 80க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil naam thamizhar katchi protest
naam thamizhar katchi protest


தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் 160 சட்டப் பிரிவை பயன்படுத்தி 7 தமிழர்களையும் 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை செய்ய மறுத்து வரும் ஸ்டாலின் அரசை கண்டித்தும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக கொடுஞ்சிறையில் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை மதத்தின் காரணமாக விடுதலை செய்ய மறுப்பதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமையில் 80க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஸ்டாலின் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

நாயின் அன்பால் முடிவுக்கு வந்த தேடல்... இப்படியும் ஒரு சம்பவம்... கரூர் காரரும், ஜோயோவும்

அப்போது திருமங்கலம் போலீசார் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். ஆனால், மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் போலீசார் கைது செய்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.

அடுத்த செய்தி