ஆப்நகரம்

தேர்தல் அடிதடி... 20 பேருக்கு அரிவாள் வெட்டு...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின் ஏற்பட்ட மோதல் காரணமாகப் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு இரு பிரிவினர் மோதிக் கொண்டனர்.

Samayam Tamil 4 Jan 2020, 1:52 pm
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மணலூர் வார்டு 1இல் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரின் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 20 பேருக்கு அரிவாள் வெட்டு. இந்த சண்டையில் சிக்கிய 13 பேர் படுகாயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil government-hospital-ramanathapuram-hospitals-48lz40dgld


தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ஆம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ஆம் தேதியும் நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி இரண்டாவது நாளாக நேற்று வரை நீடித்தது.

27 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதைத் தேர்தல் முடிவுகள் கூறுகிறது. இதற்கிடையே தேர்தலின் போது பல இடங்களில் தேர்தல் ஆணையத்தின் தவறு காரணமாகவும், பல்வேறு குளறுபடிகள் காரணமாகவும் போராட்டங்களிலும், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

செயின் பறிப்பில் 3 சதம்... 2 மாநிலத்தை அதிர விட்ட பலே திருடர்!

இந்த சூழலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வேட்பாளரின் ஆதரவாளர்கள் 2 பேரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்த கிராமமே போர்க்களமாக மாறியுள்ளது.

ஆம், ராமநாதபுரம் கமுதி அருகே உள்ள மணலூர் வார்டு ஒன்றில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளரின் ஆதரவாளர்கள் சப்பாணி, ராமர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வேளையில் சப்பானி, ராமரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்கு வாதம் இரு தரப்பினரிடையே மோதலாகவும் மாறியுள்ளது. இந்த மோதலில் சப்பாணி, ராமரின் ஆதரவாளர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து மோதிக் கொண்டனர்.

புதுக்கோட்டையை தன் வசமாக்கிய திமுக!

இந்த மோதலால் 20 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தடியடி நடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மட்டும் சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி