ஆப்நகரம்

பாலியல் வன்கொடுமை... மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருக்கலைப்பு: உறவினர்கள் போராட்டம்

பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் 5 மாத கர்ப்பத்தினை உறவினர்களின் அனுமதி எதுவும் பெறாமல் கருக்கலைப்பு செய்த மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Samayam Tamil 4 Jan 2020, 9:01 pm
தருமபுரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த அரசு மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil தருமபுரி அரசு மருத்துவமனை
தருமபுரி அரசு மருத்துவமனை


தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே சீங்காடு கிராமத்தை 19 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதைனையடுத்து, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்பெண் கர்ப்ணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

விறகு எடுக்கச் சென்ற இளம்பெண்.! பைக்கில் வந்த 3 பேர்... காட்டில் நடந்த அட்டூழியம்...

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திம்மலமேடு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (64) என்ற முதியவர், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. ஆடு மேய்க்கும் போது அப்பெண்ணுக்கு இனிப்பு தின்பண்டங்களை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததை முதியவர் ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு!

இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரிகிறது.


இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் 5 மாத கர்ப்பத்தினை உறவினர்களின் அனுமதி எதுவும் பெறாமல் கருக்கலைப்பு செய்த மருத்துவர்களை கண்டித்து, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

அடுத்த செய்தி