ஆப்நகரம்

வசமாக சிக்கிய 2 இளைஞர்கள்; கட்டி வைத்து 8 மணிநேரம் வெளுத்த மக்கள் - ஏன் தெரியுமா?

இளைஞர்கள் இருவரை பொதுமக்கள் கட்டி வைத்து, தொடர்ச்சியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Nov 2019, 8:27 am
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை கடத்த வடமாநில கும்பல் நுழைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அப்போது கையில் சிக்கிய வடமாநில நபர்களை பிடித்து தமிழக மக்கள் அடி வெளுத்த சம்பவங்கள் அரங்கேறின.
Samayam Tamil Attack


இதில் பலரும் அப்பாவிகள் என்று கூறப்பட்டது. தவறு நடக்கிறது என்றால் யாரை நம்புவது, யாரை சந்தேகப்படுவது என்று தெரிவதில்லை. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள வள்ளலார் நகர் பகுதி மக்கள் இரண்டு இளைஞர்களை பிடித்துள்ளனர்.

அவர்களை சாலையோரம் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து சுமார் 8 மணி நேரம் அடித்து உதைத்துள்ளனர். முன்னதாக வள்ளலார் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது என்ற நபர் குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு கடந்த ஞாயிறு அன்று தனது வீட்டிற்கு திரும்பினார்.

நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட்..! ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி..

அப்போது அவரது வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹமீது, சந்தேகப்படும் வகையில் தனது வீட்டிற்கு அருகே இருவர் நின்று கொண்டிருப்பதை கண்டார்.

உடனே அவர்களை திருடர்கள் என்று அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். அந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இம்ரான் கான்(19), மோகன் ராஜ்(19) ஆகியோர் ஆவர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அருகிலிருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர். நீங்கள் யார்? எதற்காக இந்தப் பகுதிக்கு வந்தீர்கள்? என்று உண்மையை கூறுமாறு அடித்து உதைத்துள்ளனர்.

10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக 10 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட இருவரையும் மீட்க முயற்சித்தனர்.

அப்போது போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பின்னர் இரு இளைஞர்களையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

காசு கொடுத்தா உன் போன கொடுக்குறேன்... திருடரின் சேட்டை...

உண்மையில் அந்த இரு இளைஞர்களும் கொள்ளையர்களா? இல்லையா? என்பது போலீசார் விசாரணைக்கு பிறகே தெரியவரும். இந்த சம்பவத்தால் வள்ளலார் நகர் பகுதி மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

அடுத்த செய்தி