ஆப்நகரம்

ஜோராக நடக்கும் கடத்தல்; தடுக்க முயலும் அதிகாரிகள்

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கடத்தப்பட்ட தங்கம், நத்தை ஓடுகள், சந்தன கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தது. இதனை கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இருந்தாலும் கடத்தல் தொழில் தமிழகத்தில் பல பகுதிகளில் ஜோராக நடந்தவண்ணமே உள்ளது.

Samayam Tamil 8 May 2019, 7:17 pm
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கடத்தப்பட்ட தங்கம், நத்தை ஓடுகள், சந்தன கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தது. இதனை கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil 3897A0AF00000578-3797128-image-a-1_1474327322608


கடந்த புதன் கிழமை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 7.968 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2.61 கோடி ரூபாய். இதில் அஸ்ஸாமில் இருந்து இருவரால் கடத்தப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தங்கம் இண்டோ- மியான்மர் எல்லையில் கைப்பற்றப்பட்டது. இதனைக் கடத்திவர கடத்தல் காரர்களின் ஜீன்ஸ் பேண்டில் பிரத்யேகமாக பாக்கெட் ஒன்று தைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 180 கிலோ எடை உள்ள 352 பெரிய நத்தை ஓடுகள் கைப்பற்றப்பட்டது என வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தகவல் அளித்துள்ளது. இந்த நத்தைகள் அழிந்துவரும் இனத்தைச் சேர்ந்தவை. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி இவற்றை கடத்துவது குற்றம்.

4.5 கோடி மதிப்புள்ள 30 லட்சம் வெளிநாட்டு சிகரெட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. கடந்த ஏப்., 29 அன்று 14 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகள் சென்னை துறைமுகத்தில் இருந்து கிருஷ்ணம் பட்டினம் துறைமுகத்துக்குக் கடத்தப்பட்டன. இவையில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி